எடுபிடி! பச்சோந்தி!:    ஸ்டாலின் இப்படில்லாம் தாறுமாறாக கழுவி ஊற்றியது இவரையா? ஓ மை காட்!

*    நட்டாவின் வருகையை தமிழக பா.ஜ.க. ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. ஆனால் ராதாரவியை கட்சியில் சேர்த்ததும் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும் வீணாகிவிட்டது. காரணம், கட்சி தாவலில் எக்ஸ்பர்ட்டான ராதாரவியை கட்சியில் இணைத்ததில் யாருக்கும் உடன் பாடு இல்லை! பெண்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத மனிதர் அவர்! அவரால் பா.ஜ.க.வுக்கு நன்மை இல்லை என்பதே உறுப்பினர்களின் வாதம். 
-    பத்திரிக்கை செய்தி

*    சசிகலாவை பொதுச்செயலாளர் என அஃபிடவிட் தாக்கல் செய்துவிட்டு, அதைத் திரும்ப பெற முயற்சித்த எடப்பாடியாரை 420 என்றார் புகழேந்தி! அப்படியென்றால் இப்போது தினகரனுக்கு எதிராக அதே காரியத்தை செய்யும் அவரும் 420 தான். 
-    வீரவெற்றி பாண்டியன்

*    தற்கொலை செய்த ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப், மூன்று பேராசிரியர்களை குற்றம் சாட்டி, மொபைல் போனில், குறுஞ்செய்தி பதிவு செய்தது உண்மை என தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. 
-    பத்திரிக்கை செய்தி

*    திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு துணி மற்றும் சணல் பைகளை எடுத்து வரும் பக்தர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் வழங்கும் திட்டம் அமல்ப்படுத்தப்படுகிறது. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. 
-    பத்திரிக்கை செய்தி

*    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டூடியோவுக்கும் இடையிலான பிரச்னையில் சமரச பேச்சில் தீர்வு காணும் படி சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தீர்வு உருவாகும் வரையில், இருதரப்பும் எந்த பிரச்னையை செய்ய கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 
-    பத்திரிக்கை செய்தி.

*    கிராமங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதன் மூலம், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. எனினும் வரவிருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். 
-    டாக்டர் கிருஷ்ணசாமி

*    முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டு நூறு நாட்கள் ஆகிவிட்டன. அவரை உடனடியாக விடுவிக்க கோர்ட் உத்தரவிட வேண்டும். தங்களுக்கு எதிரானவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையிலேயே மத்தியரசு அவரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது!
-    கே.எஸ்.அழகிரி

*    தமிழக முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு எடுபிடியாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளங்குகிறார். அவர் தலைமையில் இயங்கும், மாநில தேர்தல் ஆணையம், பச்சோந்தியாக மாறிவிட்டது. எந்த விதிகளையும் கடைப்பிடிக்காமல், ஊரக பகுதிக்கு மட்டுமே  தேர்தலை அறிவித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. 
-    மு.க. ஸ்டாலின்

*    நான் முதலில் பேரூராட்சித் தலைவராகத்தான் இருந்தேன். அதற்குப் பின் சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அவர் தான் என்னை, உள்ளாட்சி துறைக்கு அமைச்சராகவும் ஆக்கினார். நான் இப்போது அமைச்சராக இருக்க காரணம், அம்மா தான். 
-    எஸ்.பி.வேலுமணி

*    கடந்த 2006-ல் தி.மு.க. ஆட்சியில், உள்ளாட்சி தேர்தலின் போது அக்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அ.தி.மு.க.வினர் தாக்கப்பட்டனர். அண்ணாதுரை சிலை முன் கூடி, நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதையடுத்து 99 வார்டுகளில் மறுதேர்தலுக்கு கோர்ட் உத்தரவிட்டது. 

-    ஜெயக்குமார் 

    விஷ்ணுப்ரியா