stalin speech in muslim league anniversary

தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசியல் குழப்ப சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன்பே சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும் வாய்ப்பு உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 70வது ஆண்டு விழா மற்றும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று இதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பே, ஏன் உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வரும் நிலை உள்ளது என தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து மக்களிடம் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின் ஒரு முதலமைச்சரின் மரணம் குறித்து விமர்சிக்க கூடிய அளவிற்கு தற்போதைய அரசியல் சூழல் இருப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்,.