அதிமுக ஆட்சியில் தான் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்துக்கு நிலம் குத்தகை உரிமை வழங்கப்பட்டது என்றும் ஆனால் திமுக மீது பழிபோட்டு பேசுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து, வெளியேற வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்குழுவினர்  மத்தியில் ஸ்டாலின் பேசினார்.

அப்போது  பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும் அந்த விபரங்களை பட்டியலிட்டார்.

கதிராமங்கலம் பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்ததது என்று தெரிவித்த ஸ்டாலின், போராடுபவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டியதாக கூறினார்.

மேலும் இப்போதெல்லாம், பெண்கள் போராட்டம் நடத்துவது பேஷனாகிவிட்டது என எடப்பாடி பேசி அவர்களை இழிபடுத்தியதாகவும் அவர் கூறினார்.

அதிமுக ஆட்சியில்தான்  ஓ.என்.ஜி.சி.,க்கு குத்தகை உரிமை வழங்கப்பட்டது எனவும்,. இது குறித்து மக்களிடம் விவாதிக்க அதிமுக அரசு தவறிவிட்டது என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா காலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் இப்போதைய ஆட்சியாளர்கள் அனுமதி வழங்குகின்றனர் என குற்றம்சாட்டிய ஸ்டாலின் ,  கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.