Asianet News TamilAsianet News Tamil

"மீனவர் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தீர்வு…" - சொல்கிறார் மு.க.ஸ்டாலின்…

stalin speech in assembly
stalin speech-in-assembly-9l6mxy
Author
First Published Mar 20, 2017, 12:48 PM IST


கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசுதான் என்றும் அதை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என தமிழக சட்டப்வேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய ஸ்டாலின் தெரிவித்தார்.

3 நாட்கள் விடுமுறைக்கும் பிறகு தமிழக சட்டப் பேரவை இன்று கூடியது.கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு தொடர்புடைய அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதையடுத்து ராமேஸ்வரத்தை அடுத்த , தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

stalin speech-in-assembly-9l6mxy

இது தொடர்பாக ஸ்டாலின் பேசும்போது,  மீனவர்கள் பிரச்சனையில் இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மத்திய , மாநில அரசுகள்  இதனை கண்டுகொள்வதில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.அதே நேரத்தில் . தமிழக மீனவர்களின் கோரிக்கையை இலங்கை அலட்சியம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு மனித உரிமையை  மீறி மனித வேட்டை நடத்துகிறது  என்றும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு தான் என்றும் தெரிவித்தார்.

stalin speech-in-assembly-9l6mxy

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் தமிழக அரசு நிலை என்ன? என்பதை தமிழக அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் ஸ்டாலின் பேசினார். 

ஆனால் இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் திருப்தி  தரவில்லை எனக்கோரி திமுக வினர் கடும் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். மேலும் இது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. 

Follow Us:
Download App:
  • android
  • ios