ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே சதி தொடங்கிவிட்டது… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்…
ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை குறித்து அவருடன் இருந்தவர்கள் கவலைப்பட வில்லை என்றும் . அப்போதே சதி தொடங்கிவிட்டது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை என தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, என்ன நடத்தது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, மற்றும் அவரது உடல்நிலை குறித்து அவருடன் இருந்தவர்கள் கவலைப்படவில்லை என கூறினார்,
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்த்த போதே சில சதித்திட்டங்கள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முறையான உண்மையான தகவல்கள் வெளியிடப்பட வில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக எப்போதுமே அரசியல் தோல்விகளை கண்டு துவளாமல் எந்த நிலையிலும் மக்களைப் பற்றி கவலைப்படும் கட்சியாகவே இருந்துள்ளது என்றும் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க திமுக விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
