Stalin Speech at karunanidhi Diamond Jubilee function
கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலல் பதினைந்து லட்சம் போடுவேன் என்றீர்களே பதினைந்து ரூபாயாவது போட்டீர்களா என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருணாநிதி வைரவிழாவில் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இந்த விழாவில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின்மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திராகாந்தி, வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் பிரதமராக முக்கிய காரணமாக இருந்தவர் தலைவர் கருணாநிதி. ஏன் ஜனாதிபதி தேர்தலில் அவரது பங்கு இருந்துள்ளது.

மத்தியிலுள்ள அரசு 3 ஆண்டு ஆட்சியில் என்ன செய்துள்ளார்கள்? மக்களை பற்றி கவலைப்பட்டுள்ளார்களா? பெரும்பான்மை உள்ள காரணத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிடமுடியுமா? லோக்சபா தேர்தலின்போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார்கள். கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள்.
கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலல் பதினைந்து லட்சம் போடுவேன் என்றீர்களே பதினைந்து ரூபாயாவது போட்டீர்களா? ஊழலை ஒழிக்கும் வல்லமை படைத்த லோக்பால் உருவாக்கப்பட்டதா? மத்திய பாஜக அரசு, இந்தியாவை மதவாத நாடாக மாற்ற பாடுபடுகிறது. மதத் தலைவர்கள் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்தையும் சிக்க வைத்துள்ளனர்.
கலைஞர் இன்று முடியும் நிலையில் இருந்தால் இந்தியாவை காக்க இந்த கொள்கையை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பார். ஆட்சி பெரிதல்ல திமுகவுக்கு கொள்கை முக்கியம். ஆட்சியை பற்றி கவலைப்பட்டிருந்தால் 1976 லும் 1989 லும் கொள்கையை விட்டாரா கலைஞர். அன்று ஆட்சியை இழக்கவில்லையா?

மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்கிட ஒன்று சேர்வோம் இப்போது திடீரென்று மொழியை திணிக்கின்றனர். இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. திணிப்பை , ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில் எதிர்க்கிறோம். இன்றைக்கு மாட்டிறைச்சி திட்டம் போட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
மதச்சார்பின்மை காக்க மதவெறி கூட்டத்தை ஒழிக்க உறவுக்கு கைகொடுபோம் உரிமைக்கு குரல் கொடுப்போம் மதச்சார்பின்மை காக்க கை கொடுப்போம் என்று இவ்வாறு பேசினார்.
