stalin speak about meerakumar
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாரை பொது வேட்பாளராக கருதி அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார்.

அவர் இன்று சென்னையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
லீலா பேலஸ் ஓட்டலில் நடந்த இந்நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், திருநாவுக்கரசர், ராமசாமி, டி.கே.ரங்கராஜன், கனிமொழி, டி.ராஜா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
அனைவரும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி மீரா குமார் வேண்டுகோள் விடுத்தார். கொள்கை அடிப்படையிலேயே கட்சிகள் தன்னை ஆதரிப்பதாகவும் மீரா குமார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பேசிய மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மீரா குமாரை பொது வேட்பாளராகக் கருதி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
நாடு தற்போது நெருக்கடியான நிலையில் இருக்கிறது. ஊழல் மற்றும் வறட்சியை ஒழிப்பதாக கூறி வந்தவர்கள், மதச்சார்பின்மையை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.
