திமுகவுல சீனியர்கள், பெருந்தலைகள் நிறைய பேர் இருக்காங்க. சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாராம் செயல் தல. அந்த சீனியர்கள் தங்களுக்கு முன்னால ஒண்ணு பேசுறாங்க, வெளியில போய் ஒண்ணு பேசுறாங்க என பல முறை வருத்தப்பட்டதும் உண்டாம். கட்சியில சில வேகமான நடவடிக்கைகளுக்கு அவங்க இடைஞ்சலாதான் இருப்பதாக உணர்ந்த அவர். அவங்கள பகிரங்கமா குற்றம் சொல்லமுடியாத சூழலில் கடந்த சில மாதங்களாக யோசித்து ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

கடந்த ஞாயிறு மாலை திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இருந்துவந்த அழைப்பின் பேரில் சில திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றனர்.

படை தளபதிகளின் வருகைக்காக காத்திருந்த செயல் தல, எல்லோரையும் அமரவைத்து பேசியிருக்கிறார். அப்போது  “நான் உங்களை நம்பிதான் இருக்கேன். நான் ரொம்ப யோசிச்சுதான் உங்க  12 பேரையும் செலக்ட் பண்ணி இங்கே கூப்பிட்டிருக்கேன். நீங்க 12 பேரும் மாவட்டச் செயலாளர் இல்ல. அதிகபட்சமா 40, 45 வயசு இருக்குமா. இதுமாதிரியான ஓர் இளைஞர் படையை நான் ஆறு மாசமா தேடி டிக் அடித்து இப்ப தயார் பண்ணியிருக்கேன் என ஷாக் கொடுத்தாராம்.

தொடர்ந்துப் பேசிய அவர்; 12 பேர் இருக்கீங்க. உங்களை ஆறு டீமா பிரிச்சிருக்கேன். ஒவ்வொரு டீமுக்கும் ஒவ்வொரு மண்டலம்னு தமிழ்நாட்டை ஆறா பிரிச்சிருக்கோம்.

ஒரு பூத்ல ஆயிரம் ஓட்டு இருக்குன்னா என்ன பண்ணனும்னு ஒரு பெரிய லிஸ்டே போட்டு அசைன்மென்ட் போட்டு கொடுத்திருக்கிறார்.

60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் போடணும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்களை போடக் கூடாது.

அந்த பூத்ல இருக்குற எல்லா சாதிகளுக்கும் பூத் கமிட்டியில உரிய பிரதிநிதித்துவம் இருக்கணும்.

1000 பேருக்கு 20 பேர் உறுப்பினர் அதுல பெண்கள் 5 பேர் கண்டிப்பா இருக்கணும்.

60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி உருப்பினர்ணா, அந்த உறுப்பினர் அந்த 60 பேர் வசிக்கிற பகுதியில வசிக்கிறவரா இருக்கணும்.

2ஆவது வார்டுக்கு 8ஆவது வார்டுலேர்ந்து கொண்டுவந்து போடக் கூடாது.

புறநகரில் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், கிளைச் செயலாளர்களை வைத்து கூட்டம் போடுங்க.

மாநகரில் மாவட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர் கூட்டம் போடுங்க.

பல மாவட்டங்கள்ல பழைய பூத் கமிட்டி பட்டியலை வாங்கி அதுல இந்த நிபந்தனைகள் ஃபில் ஆகியிருக்கானு பாருங்க. இல்லேன்னா மாத்தச் சொல்லுங்க.

ஜூலை 12ஆம் தேதி இந்த பணிகளை ஆரம்பிக்கணும். ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள்ள முடிச்சிடணும்.

நான் எல்லா மாவட்டச் செயலாளர்கள்கிட்டயும் சொல்லிடறேன். உங்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் ஒத்துழைப்பையும் அவங்க கொடுப்பாங்க என தாறுமாறான ஒரு லிஸ்டை போட்டு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

அதன்பின் பூத் கமிட்டி பற்றிய விதிமுறைகள் அடங்கிய கிட் ஒன்று 12 பேருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி 12 பேரிடமும் கருத்து கேட்ட ஸ்டாலின்,

“நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வேணும்னாலும் வரலாம். அதனால 12ஆம் தேதி ஆரம்பிச்சு வேகமாக பண்ணுங்க. ஒவ்வொரு கூட்டத்தையும் போட்டோ எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க.

பூத் கமிட்டி விவரங்களை எக்செல் பிரின்ட்ல அனுப்புங்க.

திமுக இனி சீனியர்கள்கிட்ட இல்ல. உங்க கையிலதான் இருக்கு. நம்பிக்கையா பணியாற்றுங்க என சொல்லி தன்னம்பிக்கை கொடுத்து தைரியமாக கை குலுக்கி வழியனுப்பி வைத்திருக்கிறார் செயல் தல.

ஸ்டாலின் செலக்ட் பண்ண அந்த 12 பேர் கொண்ட படைத்தளபதிகள் யார் யார் தெரியுமா?

மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தாயகம் கவி வந்தார்.

தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் எம்.எல்.ஏ. கோவி செழியன்

இ.கருணாநிதி பல்லாவரம்,

மு.பெ.கிரி செங்கம்,

இன்பசேகரன் பென்னகரம்,

ஈஸ்வரப்பன் ஆற்காடு,

எஸ்.ஆஸ்டின் கன்னியாகுமரி,

ஜெ.ரவிச்சந்திரன் எழும்பூர்,

வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம்,

எழிலரசன் காஞ்சிபுரம்.