stalin says that he came assembly with eye pain
கண் ஆபரேஷன் பண்ணியிருந்தாலும் தன்னுடைய கடமையை சரியாக செய்வதாகவும், போலீஸ் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்பதால், வலியைப் பொறுத்துக் கொண்டே சட்டப் பேரவைக்கு வந்ததாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் 54வது ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், கல்விக்காக பல சாதனைகளை செய்து, கல்வியை மக்களிடம் கொண்டு சென்ற எளிய மனிதர்தான் காமராஜர் என தெரிவித்தார்.
கண் சிகிச்சை செய்திருந்தாலும், போலீஸ் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் என்பதால், சட்டப் பேரவைக்கு வலியைப் பொறுத்துக் கொண்டு, சட்ட சபைக்கு வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், முழுமையாக வெற்றி பெறுவதில்லை என குற்றம்சாட்டிய மு,க,ஸ்டாலின். அரசின் திட்டங்கள் வெற்றி பெற சமூக அமைப்புகள் இணைந்து சமுதாய அக்கறையுடன் செயல்பட வேண்டும். என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கருப்புச்சட்டம், மீன் ஏற்றுமதிக்கும், வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கும் என தெரிவித்தார். இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்,
நட்பு நாடு எனக் கூறிக்கொண்டு இலங்கை அரசு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
