சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது, அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய  ரெய்டில் சிக்கி சிக்கிய ஆவணங்கள் மூலம் அம்பலமானது,

இதன் தொடர்ச்சியாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிம்  பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  தேர்தல் முறைகேடுகளை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடைபெற்றது ஆதாரங்களுடன் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்த பணப்பட்டுவாடா பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதும் அசைக்க முடியாத ஆதராங்களாக வெளிவந்துள்ளன என்றும் அமைச்சர்கள் மீதும் இந்த குற்றச்சாட்டு இருப்பதால் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் முறைகேட்டில் முதலமைச்சர் நேரடியாக ஈடுபட்டுள்ளதால் இந்த ஆளும் அரசை உடனடியாக கலைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஏனென்றால் அதிமுக அரசு இருக்கும் வரை அதிகார துஷ்பிரயோகமும், பணப்பட்டுவாடாவும் இருக்கும் என ஸ்டாலிர் தெரிவித்தார்.

தேர்தலை தள்ளி வைப்பதற்கு காரணமான தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  ஸ்டாலின் வலியுறுத்தினார்.