Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பீதியில் சட்டப்பேரவையை நடத்தியே தீரணுமா..? முதல்வர் எடப்பாடிக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

மக்கள் அனைவரும் பீதியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொகுதியில் இருக்க வேண்டும். எனவே சட்டப்பேரவை விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். மக்களுக்காக எம்.எல்.ஏக்கள் தொகுதியில் இருப்பதுதான் முறை. 

Stalin requests to Tamil nadu assembly to be postponed due to corona virus effect
Author
Chennai, First Published Mar 20, 2020, 9:54 PM IST

கொரோனா பீதி அதிகரித்துவரும் வேளையில் சட்டப்பேரவையைக் கூட்டி நடத்திக்கொண்டிருப்பது தேவையா என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Stalin requests to Tamil nadu assembly to be postponed due to corona virus effect
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். “22 அன்று பிரதமர் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என நேற்று உரையாற்றியுள்ளார். ஒடிஷா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களையே நிறுத்தியுள்ளனர். அனைவரும் விழிப்புணர்வோடு இருக்கும்படி வலியுறுத்தி வருகிறோம். நோயைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால், நாமே சட்டப்பேரவையைக் கூட்டி அதிகமானோர் கூடியுள்ளோம். இது சரியா?Stalin requests to Tamil nadu assembly to be postponed due to corona virus effect
மக்கள் அனைவரும் பீதியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொகுதியில் இருக்க வேண்டும். எனவே சட்டப்பேரவை விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். மக்களுக்காக எம்.எல்.ஏக்கள் தொகுதியில் இருப்பதுதான் முறை. சென்னையில் அமைச்சர் ஒருவர் தன்னுடைய வீட்டு முன்பாக “யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படியான சூழலில் நாம் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமா?” மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios