Asianet News TamilAsianet News Tamil

வீரமணியை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள்... சீரியஸாக பேசிய ஸ்டாலின்

ஆசிரியரின் வயதை நினைத்து நாம் பயப் பட்டாலும், அவர் பயப்படுவது இல்லை. அவரைப் பார்த்து இன எதிரிகள் பயப்படு கின்றார்களே தவிர, அவருக்கு எந்த பயமும் கிடையாது என திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Stalin proved DK Leader Veeramani
Author
Salem, First Published Aug 29, 2019, 11:03 AM IST

ஆசிரியரின் வயதை நினைத்து நாம் பயப் பட்டாலும், அவர் பயப்படுவது இல்லை. அவரைப் பார்த்து இன எதிரிகள் பயப்படு கின்றார்களே தவிர, அவருக்கு எந்த பயமும் கிடையாது என திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலத்தில்  கோட்டை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் பணி என்பது 1000 ஆண்டு களுக்கு தேவையான பணியாகும். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் தன்னுடைய நிறைவு உரையை முடிகின்ற நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னது போல், 16 வயது இளைஞனின் உற்சாகத்தோடு அவர் இங்கு இருக்கிறார். இன்னும் பல ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்காக உழைக்கக் காத்திருக்கிறார்.

அவரைப் பார்க்கின்றபோது, எங்களுக்கு ஒரு அதிசயமும், ஆச்சரியமும் வரக்கூடிய அதே நேரத்தில், ஒரு உத்வேகம் வருகிறது. காரணம், இவ்வளவு பயணத்தை எப்படி மேற்கொள்கிறார்? இந்த வயதில் இந்தப் பயணத்தை அவர் எப்படி நடத்துகிறார்? எவ்வளவு நேரம் பேசுகிறார்? எவ்வளவு எழுதுகிறார்? என்பதை நானும் தொடர்ந்து கவனித்து வரு கின்றேன்.

ஆசிரியரின் வயதை நினைத்து நாம் பயப்பட்டாலும், அவர் பயப்படுவது இல்லை. அவரைப் பார்த்து இன எதிரிகள் பயப்படுகின்றார்களே தவிர, அவருக்கு எந்த பயமும் கிடையாது.

அண்மையில் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலி அலுவலக வளாகத்தில் அவரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தோம். அந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் வரவேண்டும் - தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் எடுத்து வைத்தோம். 'முரசொலி' அலுவலகத்தில் அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் தகுதி 'விடுதலை'க்குதான் உண்டு! அதனால்தான் உங்களை அழைத்தோம். நீங்களும் வந்து, அந்த விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தீர்கள் என இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios