தமிழக சட்டப் பேரவையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸடாலின் ஸ்டாலின் இன்று புகார் தெரிவிக்கவுள்ளார்.
அங்கு புறப்படுமுன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சசிகலாவின் பினாமி அரசாக செயல்படும் தற்போதைய அரசை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்

தமிழக சட்டசபையில் நிகழ்ந்த இந்த ஜனநாயக படுகொலைக்கு நீதி கேட்டும், சபாநாயகர் தனபால் மீது நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரணாப் முகர்ஜியை, சந்தித்து ஸ்டாலின் இன்று நேரில் புகார் அளிக்க உள்ளார்.

இதற்காக ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.இதனைத் தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
