Asianet News TamilAsianet News Tamil

கொல்கத்தாவா? ஸ்டாலின் போட்ட உத்தரவு! கலங்கி நின்ற கனிமொழி..!

கொல்கத்தா பக்கம் வந்துவிடக்கூடாது என்கிற ரீதியில் மு.க.ஸ்டாலின் போட்ட கண்டிப்பான உத்தரவால் கனிமொழி கலங்கி நின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Stalin ordered Shocked Kanimozhi!
Author
Tamil Nadu, First Published Jan 20, 2019, 12:53 PM IST

கொல்கத்தா பக்கம் வந்துவிடக்கூடாது என்கிற ரீதியில் மு.க.ஸ்டாலின் போட்ட கண்டிப்பான உத்தரவால் கனிமொழி கலங்கி நின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு மேற்கொண்ட முதல் மிகப்பெரிய மாற்றம் டெல்லிக்கான அக்கட்சியின் பிரதிநிதியை மாற்றியது தான். கலைஞர் இருந்த வரை தி.மு.கவின் டெல்லி பிரதிநிதி என்றால் உடனடியாக நினைவுக்கு வந்தவர் முரசொலி மாறன். அவர் மறைவுக்கு பிறகு தி.மு.கவின் டெல்லி முகமாக தயாநிதி மாறன், திருச்சி சிவா இடையே போட்டி ஏற்பட்டது. ஆனால் கலைஞர் மகள் கனிமொழி இவர்கள் இருவரையும் ஓரம் கட்டி டெல்லியில் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியானார். Stalin ordered Shocked Kanimozhi!

தி.மு.கவின் மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு இருந்தார். இதே போல் மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா இருந்தார். ஆனால் இவர்கள் எல்லாரையும் மீறி டெல்லியில் தி.மு.கவின் பிரதிநிதியாக வலம் வந்து கொண்டிருந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு 2014 தேர்தலில் தோற்ற பிறகு திருச்சி சிவாவை எளிதாக ஓரம்கட்டி அனைத்து கட்சி பிரமுகர்களுடனும் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார் கனிமொழி. Stalin ordered Shocked Kanimozhi!

இந்த நிலையில் கலைஞர் மறைந்த நிலையில் கனிமொழியை டெல்லியில் இருந்து காலி செய்யும் வேலை நடைபெற்றது. எவ்வித எதிர்ப்பும் இன்றி கனிமொழியும் இந்த விவகாரத்தில் சரண்டர் ஆகிவிட்டார். இதனை சாதகமாக பயன்படுத்தி ஸ்டாலின் தி.மு.கவின் டெல்லி பிரதிநிதியாக தனது மகன் சபரீசனை முன்னிலைப்படுத்திவிட்டார். இருந்தாலும் கூட டெல்லியில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் தி.மு.க சார்பில் கனிமொழி கலந்து கொண்டு வந்தார். Stalin ordered Shocked Kanimozhi!

சோனியா காந்தியுடனான சந்திப்பு, கெஜ்ரிவால் டெல்லியில் ஏற்பாடு செய்த எதிர்கட்சி கூட்டம் போன்றவற்றில் ஸ்டாலினுடன் கனிமொழியும் இருந்தார். ஆனால் நேற்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை. பார்வையாளராக பங்கேற்கும்படி கனிமொழிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. Stalin ordered Shocked Kanimozhi!

ஆனால் கனிமொழி கொல்கத்தா வர வேண்டாம் என்று ஸ்டாலின் கூறிய தகவல் அவருக்கு பாஸ் செய்யப்பட்டது. இதனை அடுத்து தூத்துக்குடியில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க கனிமொழி சென்றுவிட்டார். இதனால் தனது டெல்லி அரசியல் ஆசை இனி நிராசை தான் என்கிற முடிவுக்கு வந்து கனிமொழி கலங்கியதாக கூறப்படுகிறது. ஜூலை மாதத்துடன் எம்பி பதவி முடிவடைய உள்ள நிலையில் தூத்துக்குடியில் நின்று மீண்டும் எம்பி ஆக வேண்டும் என்பது கனிமொழி ஆசை. Stalin ordered Shocked Kanimozhi!

ஆனால் தூத்துக்குடி எம்.பி தொகுதி ம.தி.மு.கவில் இருந்து தி.மு.கவில் இணைந்த ஜோயலுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிட்ட தகவல் தெரியாமல் கனிமொழி அங்கு வலம் வந்து கொண்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் அந்த மாவட்ட தி.மு.கவினர். மேலும் கனிமொழியை பொறுத்தவரை எம்.எல்.ஏவாக்கி டம்மியான ஒரு அமைச்சர் பதவி கொடுத்து ஓரமாக வைத்துக் கொள்வது தான் ஸ்டாலினின் எண்ணம் என்றும் அக்கட்சியினர் பேச ஆரம்பித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios