தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மழையில் நனைந்தபடி சென்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும் அவர் வழங்கி வருகிறார். நிவர் புயல் எதிரொலியாக கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை நகர் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்று கனமழை காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்துகொடுக்க கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களைத் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். 

கொளத்தூர், திருவிக நகர், வில்லிவாக்கம், ஐசிஎப், பெரம்பூர் உள்ளிட்ட  தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்தபடி கொட்டும் மழையில் நனைந்தவாறு திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். அதுதான் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வருகிறார் அதிமுகவின் ஏற்பாட்டின் பேரில் கொளத்தூர், ஐசிஎப் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது.