திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பெண் காவலராக  பணியாற்றி வந்தவர் செல்வராணி.  

அடிப்படையில் மிகுந்த இலக்கிய ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் இலக்கியங்கள் மீது பற்றுகொண்ட அவர் கலைஞரின் மறைவுக்கு இரங்கற்பா எழுதி வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். அது சமூகவலைதளங்களில் வைரலானது.

இதனையறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராணியை நுண்ணறிவு பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு மாற்றினார்.

கருணாநிதிக்கு  இரங்கற்பா இயற்றிய ஒரே காரணத்திற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத செல்வராணி, அவரது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் நேற்ற நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு, திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காவலர் செல்வராணி குறித்த தகவல் அறிந்து இரவு 10 மணிக்கு அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்