திமுக அணிக்கு 97 பேர் சட்டமன்றத்தில் இருப்பதாகவும், இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 பேர் ஆகிவிடுவார்கள் என்றும் கூறிய ஸ்டாலின், “234இல் பாதி 117 தான். எனவே இடைத்தேர்தல் முடிவில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் மே 19ஆம் தேதி சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்  நடைபெற உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மீண்டும் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஓட்டப்பிடாரத்தில் நேற்று பகலில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து இரவு திறந்தவெளி வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கனிமொழிக்கு ஓட்டு போட்டது போல சண்முகையாவுக்கு ஓட்டு போட வேண்டும், நான் மட்டும் வாக்கு சேகரிக்க வரவில்லை கனிமொழியும் என்னுடன் வந்துள்ளார், அண்ணனும் தங்கையும் சேர்ந்து வாக்கு சேகரிக்க வந்துள்ளோம் என்று கூறிய அவர், “மே 23ஆம் தேதி வெளியாகும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் முடிவில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 22 தொகுதிகளில் திமுகதான் வெற்றி பெறும். அதன்பிறகு தானாக திமுக ஆட்சிக்கு வந்துவிடும்” என்றார். 

மேலும் பேசிய அவர், ஏற்கெனவே திமுக அணிக்கு 97 பேர் சட்டமன்றத்தில் இருப்பதாகவும், இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 பேர் ஆகிவிடுவார்கள் என்றும் கூறிய ஸ்டாலின், “234இல் பாதி 117 தான். எனவே இடைத்தேர்தல் முடிவில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தார்.