திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஓ.பி.எஸ் கார் வருவதை அறிந்து தனது காரை ஓரங்கட்டி வழிவிட்டார். தான் ஒரு கட்சியின் தலைவராக , அமைச்சர் அந்தஸ்த்தில் இருந்தாலும் முதல்வர் என்ற முறையில் ஓபிஎஸ் காருக்காக தனது காரை ஒதுக்கி வழிவிட்ட ஸ்டாலினின் செயல்பாடு பாராட்டப்பட்டு வருகிறது.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் சற்று வித்யாசமானவர். ஜனநாயக சிந்தனை உடையவர். கவுரவம் பார்க்காமல் செயல்படுபவர். 

திமுக , அதிமுக என்ற இரண்டு கட்சிகளின் கௌரவ போராட்டத்தில் சாதாரண தலைவர்களே பந்தா செய்த போது பந்தா இல்லாமல் பல முறை நடந்து கொண்டவர் ஸ்டாலின். சுனாமி நிதி வசூலிக்கப்பட்டபோது அதை கவுரவம் பார்க்காமல் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்தார். 

2016 சட்டமன்ற அமைச்சர்கள் பதவி ஏற்பின் போது வேண்டுமென்றே சிலர் அவமானப்படுத்துவதாக எண்ணி நான்காவது வரிசையில் ஸ்டாலினை உட்கார வைத்த போது எதுவும் சொல்லாமல் உட்கார்ந்துவிட்டு சென்றார். 

இதைபார்த்து முதல்வர் ஜெயலலிதாவே வருத்தம் தெரிவித்து இது போன்று நடக்காமல் பார்த்துகொள்வதாக தெரிவித்த சம்பவமும் நடந்தது உணடு. 

சட்டமன்ற தேர்தலின் போது பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசி திமுக தேர்தல் அறிக்கையை ஜனநாயக பூர்வமாக கொண்டுவர பாடுபட்டார்.

முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது உடனடியாக பார்த்து அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்தவர். தொடர்ச்சியாக முதல்வர் , எதிர்கட்சி என்ற அலுவல் சார்ந்த உறவுகளை பராமரிப்பதில் கவுரம் பார்க்காமல் செயல்படுபவர் ஸ்டாலின்.

அதற்கு எடுத்துக்காட்டாக இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை சட்டமன்ற நிக்ழ்ச்சியில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது ஸ்டாலின் கார் அணிவகுப்புக்கு பின்னால் முதல்வர் ஓபிஎஸ் கார் வந்துள்ளது. இதை பார்த்த ஸ்டாலின் முதல்வர் கார் செல்லும்போது நாம் முன்னால் செல்ல கூடாது. 

அவர் கார் செல்லட்டும் ஒரம் ஒதுங்கி நில்லுங்கள் என்று கூறி தனது கார் மற்றும் உடன் பாதுகாப்புக்காக வந்த கார்கள், உடன் வந்த எம்.எல்.ஏக்கள் காராஇ ஓரங்கட்டசொன்னார்.

அவர் கார் ஓரங்கட்டபட்டவுடன் வேகமாக வந்த முதல்வர் ஓபிஎஸ்சின் கான்வாய் அவர்களை கடந்து சென்றது. அதன் பின்னர் ஸ்டாலின் கார் சென்றது.

ஸ்டாலினுக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு உண்டு. எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் அமைச்சர் அந்தஸ்து உண்டு. ஆகையால் அவரது காருக்கும் உரிய அரசு மரியாதை உண்டு. அவரது கார் முன்னால் சென்றால் எந்த போலீசாரும் தடை செய்ய போவதில்லை. ஆனாலும் தனது காரை ஓரங்கட்டியது பலராலும் பாராட்டப்படுகிறது.