stalin left assembly and pressmeet about dhanabal

சட்டமன்ற மானிய கோரிக்கைகள் மீதான கூட்டம் இன்று 3வது நாளாக தொடங்கியது. கடந்த 4 நாட்களுக்கு முன் எம்எல்ஏ சரவணன், அதிமுகவில் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறிய வீடியோ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இதாடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நேரமில்லா நேரத்தின்போது கடந்த 2 நாட்களாக கேள்வி எழுப்பினார். இதனை சபாநாயகர் தனபால் ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பேசியபோது, உரிய ஆதரத்தை என்னிடம் கொடுத்தால், அதுபற்றி பேச அனுமதிக்கிறேன் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று 3வது நாளாக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதா விவாதம் நடந்து முடிந்து. அப்போது நேரமில்லா நேரத்தில் மு.க.ஸ்டாலின், மீண்டும் எம்எல்ஏ சரவணன், வீடியோ குறித்து பேசினார். அதில், தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், அதனை சபாநயாகர் ஏற்கவில்லை. இதனால், மீண்டும் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக அதிமுக எம்எல்ஏ சரவணன் பேச்சு குறித்து விவாதத்தை நடத்த கோரினோம் அதற்கு சபாநாயகர் தனபால், மறுத்துவிட்டார். ஆதாரத்துடன் வந்தால், அதை ஏற்று பேச அனுமதிப்பதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் இன்று எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ காட்சியை சிடியில் கொண்டு வந்தோம்.

நேரமில்லா நேரத்தின்போது இதுபற்றி விவாதிக்க வேண்டும. உரிய ஆதாரம்இருக்கிறது என கேட்டேன். தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தி இதுதான். இது நூற்றுக்கு நூறு உண்மையானது என்றேன். அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இந்த சிடியை இங்கே வாங்க முடியாது. சட்டமன்றம் முடிந்த பிறகு, எனது அறையில் கொண்டு வந்து கொடுத்தால், அதை பார்த்துவிட்டு, பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என அவர் கூறியிருந்தால், நான் காத்திருந்து கொடுத்து இருப்பேன்.

ஆனால் அதற்கான முழு அனுமதியை மறுத்து, திட்டவட்டமாக, சர்வாதிகாரமாக மறுத்துவிட்டார். மேலும், இதனை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார். இதை நேற்று பேசியபோது, ஆதராம் கொடுத்துவிட்டு பேச வேண்டும் என பதிவு செய்தார் சபாநாயகர்.

சபாநாயகர் சொன்னதன் அடிப்படையில் இங்கு வந்தேன். ஆனால், அதை பற்றி பேச கூடாது என கூறிவிட்டார். இப்படி நடந்து கொண்டால், சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை எப்படி நிலை நாட்ட முடியும். இதனால், நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

எடப்பாடியின் ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகிவிட்டது. சட்டமன்றத்தில் நடக்கும் கூத்து தமிழகத்துக்கு பெரும் அவமானம். தலைகுனிவு. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.