*    அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து, சட்டசபையை கூட்டி, விவாதித்து முடிவு செய்திருக்க வேண்டும். சட்டசபையை கூட்டி ஆலோசிக்காமல் முடிவெடுத்தது மிக தவறானது. 
-    விஜயதாரணி

*    அதிபர் டிரம்ப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய  உள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த விசாரணையில் டிரம்போ, அவரது வழக்கறிஞர்களோ பங்கேற்க மாட்டார்கள். 
-    அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர் குழு

*    ஈ.வெ.ராவும், திராவிட இயக்கமும், அதன் அரும்பெரும் தலைவர்களும் போராடி பெற்றுத் தந்த கல்வி உரிமை பறிபோகும் நிலை உள்ளது. அதை மீடக் உயிரை பணயம் வைத்து அறப்போர் துவங்குவோம். 
-    கி.வீரமணி

*    உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கூடாது என்பது எங்கள் கருத்து. உள்ளாட்சி தேர்தலை கட்சி சின்னங்கள் அடிப்படையில் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளை நோக்கி வேண்டுகோள் விடுக்கிறோம். 
-    அர்ஜூன் சம்பத்

*    ரஜினி என் உயிர் மூச்சுக்கும் மேலானவர். சமூகத்தில் சிறந்த அறிவாளிகள், விஞ்ஞானிகளை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், நல்ல மனிதர்களை எளிதாக கண்டுப்பிடித்து விட முடியாது. ரஜினி நல்ல மனிதர். இது நாள் வரை அடுத்தவர் இதயத்தை காயப்படுத்தாத ஓர் இதயம் என்றால் அது ரஜினி மட்டுமே. ரஜினியை போல் யாரும் இருக்க முடியாது. 
-    பாரதிராஜா

*    ஆட்சியில் இல்லாத போதும் தி.மு.க.வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் நாங்கள் விமர்சிக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உண்டு. மோடி எதிர்ப்பு அணிக்கு தமிழகத்தில் ஸ்டாலின் தான் தலைமை வகிக்கிறார். இந்த விமர்சனங்கள் எல்லாம் அரசியல் ரீதியாகத்தான் இருக்குமே தவிர, தனிப்பட்ட முறையில் இருக்காது. 
-    வானதி சீனிவாசன்.

*    எழுத்தாளர்கள் சமூக அக்கறையுடன் எழுத வேண்டும். அப்படி எழதும் எழுத்தாளர்கள், தங்களின் எழுத்துக்களை தங்கள் பிள்ளைகளூம் படிப்பர் என்ற எண்ணத்துடன், பொறுப்புடன் எழுத வேண்டும். 
-    இல.கணேசன்

*    மரபு வழி வேளாளர்கள் அனைவரையும், தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து, பட்டியல் பிரிவிலிருந்து இந்த இனத்தவரை விலக்கி, மத்திய அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். 
-    சீமான்.

*    மக்களின் பேராதரவுடன் ஊரக உள்ளாட்சி  அமைப்புகளின் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை குவித்து, அ.தி.மு.க. அரசின் முகத்தில் கரியை பூச, தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் தயாராக உள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் மழையால் பாதித்துள்ளனர். ஆனால் ஆட்சியாளர்கள் இதை கண்டு கொள்வதில்லை. இந்த அலட்சியத்துக்கான பரிசாக தோல்வி விரைவில் கிடைக்கும். 
-    மு.க.ஸ்டாலின்

*    உள்ளாட்சிகளின் பல பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் விட்டிருப்பது உள்நோக்கம் உடைய, வஞ்சக திட்டம். தேர்தலையே தள்ளிப் போடுவதற்காகன் நீதிமன்றங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, தி.மு.க. மீது அபாண்டமாக பழி சுமத்துவது, ஆளும் அரசின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சி!
-    வைகோ