Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் !! அடித்துச் சொன்ன ராகுல் காந்தி !!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதலமைசசராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

stalin is the next prime minister
Author
Nagercoil, First Published Mar 13, 2019, 9:09 PM IST

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

stalin is the next prime minister

இதில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, விரைவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகப்  போகிறார் என தெரிவித்தார்.. தமிழகத்தில்  அமைந்திருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணி. பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார்.  2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடி ஆட்டிவைக்கும்  கைப்பாவை ஆட்சியாகும். என கடுமையாக விமர்சனம் செய்தார்.

stalin is the next prime minister

ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்மென்றாலும் செய்யலாம், ஆனால் தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்கமட்டார்கள்.  

stalin is the next prime minister

தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கம் உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். பிரதமர் மோடி பொய்யைதவிர எதையும் சொல்வது கிடையாது. ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என கூறினார். 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. 

இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரடியாக பார்த்தேன். அவர்களுடைய வலி தெரியும், உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன். 

எங்களுடைய வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றுகிறார். 

stalin is the next prime minister

இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்றுவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. 

ஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றியும், இளைஞர்கள் வேலையின்றியும்  கஷ்டங்களை அனுபவித்து வருகிறாகள்  என ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடியை வெளுத்து வாங்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios