தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்  இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் ஒருபக்கம் செய்ய தொடங்கிவிட்டது. மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகள் சைலன்டாக தேர்தல் வேலைகள் செய்ய தொடங்கவிட்டார்கள். இந்தநிலையில் அடுத்த முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் என காங்கிரஸ் எம்பி ஒருவர் ஆரூடம் சொல்லியிருக்கிறார். 

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம் பேசும் போது.. "வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்றும், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு தயாராக உள்ளது. அடுத்து நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும் முக ஸ்டாலின் முதல்வராக ஆட்சியில் அமருவார்.மேலும்  இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசிடம் அதனை தடுக்க சரியான யுக்திகள் இல்லை என்றும் உலக அளவில் தடுப்பு மருந்துகள் வந்தால்தான் இதற்குத் தீர்வு ஏற்படும் என்றும் லாக்டவுனால் மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட திட்டமிடுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இவ்வாறு பேசி இருப்பது திமுக காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.