திமுக சார்பில் ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி நடைபெறவுள்ள முரசொலி பவளவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதிக்கும்,  பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். 

முரசொலி 1942- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதாவது பவளவிழா ஆண்டாக நிறைவடைகிறது.

இதையொட்டி முரசொலி பவளவிழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.   ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பிதழ் தற்போது தயாராகி உள்ளது. அந்த அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதியிடம், செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் வழங்கினார்.