உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு அணுசரணையாக நடந்து கொண்டவர்களுக்கு கட்சி பதவி கொடுக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு கறாராக உத்தரவு போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கிளை அளவில் துவங்கி, ஒன்றியம், நகரம், மாவட்டம் என தேர்தலை நடத்துகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட யாரும் பதவிக்கு கொடுத்து விடக்கூடாது என அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டிருப்பதாக தகவல். 

ஏனென்றால், கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுத்தால், சட்டசபை தேர்தலில் அவர்கள் ஆளுங்கட்சி தரப்பிடம் விலை போய், வெற்றிக்கு உலை வைத்து விடுவார்கள் என்கிற பயம் மு.க.ஸ்டாலினை ஆட்டிப்படைக்கிறது. அதனால், மாவட்ட நிர்வாகிகளிடம், 'கவனமாக இந்த உட்கட்சி தேர்தலை நடத்தி, கட்சி விசுவாசிகளுக்கு பதவிகளை கொடுங்கள் என உத்தரவிட்டு இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.