முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஊழல் நாயகன் என்ற பட்டம் சுட்டுவதாகவும், அவர் ஆண்மை அற்றவர் என குற்றம் சாட்டுவதாகவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான 3 வது சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக விவசாயிகளின் போராட்டத்திற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறினார். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊழல் செய்வதில் காட்டக்கூடிய வேகத்தை நிவாரணப் பணிகளில் தமிழக அரசு காட்டவில்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அறிக்கை நாயகன் என பட்டம் அளித்ததை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஊழல் நாயகன், கமிஷன் நாயகன், கரப்ஷன் நாயகன் என பட்டம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் ஆண்மையற்றவர் என குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தார். 

விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பு  தேர்தலுக்காக நடத்தப்படுகிற நாடகம் என குற்றம் சாட்டினார். அதிமுக அரசின் ஊழல்களை ஆதாரத்தோடு கூட்டங்களில் சொல்கிறோம். முதல்வரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குற்றத்தை எடுத்துக் கூறினால் முதலமைச்சரால் தாங்க முடியவில்லை, 

ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகளை அறிக்கை மூலம் சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் வேலை என தெரிவித்தார். குடிமராமத்து திட்டம் என்ற பெயரில் குளங்களை சரியாக தூர் வாராமல் தமிழக அரசு கமிஷன் அளித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி இருப்பதாக தெரிவித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் கோமாளி என்றும் அவர் விவாதத்துக்கு வருவதை ஏற்க முடியாது எனவும், அவர் ஒருஅரசியல் பப்பூன் எனவும் தெரிவித்தார்.  

ரஜினி கட்சி தொடங்கிய பின்னர் அது குறித்து தான் வருத்தம் தெரிவிப்பதாகவும், அனைவருக்கும் கட்சி தொடங்க உரிமை இருப்பதாக தெரிவித்தார்.  தமிழருவி மணியனை ஏன் கட்சியில் சேர்த்துக் கொண்டோம் என ரஜினி வருத்தப்படுவதாக தனக்கு தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.திமுக மீது அதிமுகவினர் செல்லக்கூடிய ஊழல் புகாருக்கு விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், இது குறித்து முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர்கள் சொல்லகூடிய தேதிகளில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.