அப்படிப்போடு..! இப்போதே "வாக்கு கொடுத்த ஸ்டாலின்"..! நிம்மதி பெருமூச்சு விட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர்..! 

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வைத்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என இப்போதே திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்த்ததாக தெரியவில்லை. அதே வேளையில், ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல வில்லை என்றால், அவர்களுக்கான இடங்களை காலி இடங்களாக அறிவிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு, அதற்கேற்றவாறு ஒரு சிலரை சஸ்பெண்ட் செய்தும், காலி இடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டது. மேலும், இவ்வளவு செய்தும் போராட்டக்காரர்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அறவழியில் போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் போராட்டத்தை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்து உள்ளார். 

உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வை ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி வழங்க செய்ய வேண்டும், ஆசிரியர்கள் விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்வது சரியல்ல என ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதிமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் நிச்சயம் ரத்து செய்யப்படும் என மு.க ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு  பின், திமுக செயல்படுகிறது என்ற குற்றசாட்டு உள்ள நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, ஜாக்டோ ஜியோ அமைப்பினரை சற்று நிம்மதி பெருமுமூச்சி விட வைத்துள்ளது.