stalin demands to dismiss miniter vijayabaskar

வருமானவரித்துறை சோதனைக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சர் வீட்டிற்கு மற்ற அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் சென்று ஆதரவு தெரிவிப்பதும், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரச்சினை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.

வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சர் திரு விஜயபாஸ்கரை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்கள் டாக்டர் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.