மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் எனவும் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

கடந்த 10 நாட்களாக பல்வேறு பிரச்சனை காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே தமிழத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசும் கால தாமதம் செய்து வருகிறது. 

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யபப்பட்டுள்ளது. 

சந்திரபாபு நாயுடு பிரதமராக இருக்கும்போது மோடி எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதால் தான் அவருடைய கட்சியை சார்ந்த 2 மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார். ராஜினாமா செய்ததோடு நிற்காமல் பாஜகவுக்கு தந்த ஆதரவை திரும்பப்பெற்றுள்ளனர். 

இதையடுத்து தமிழக அமைச்சர்களும் அதிமுக எம்.பிக்களும் மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்க ஆட முடியாது எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

அதிமுகவுக்கு என்று தனி கொள்கை உள்ளது எனவும் எடுத்தோம் கவுத்தோம் என எதுவும் கூற முடியாது எனவும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் எனவும் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சந்திரபாபு நாயுடு துணிச்சலாக முடிவு எடுப்பது போல் எடப்பாடியும் ஒரு முடுவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.