தஞ்சை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ​மேற்கொள்ள இருக்‍கும் தேதிகள் வெளியாகி உள்ளது.

நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதியன்று அரவக்குறிச்சியிலும், 13-ம் தேதி புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பிலும், நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் திருப்பரங்குன்றத்திலும், நவம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தஞ்சையிலும் திரு. மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நான்கு தொகுதிகளிலும் நவம்பர் 19 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.