இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில்  எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

அப்போது அவர் பேசியதாவது. திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு மாதத்துக்குள் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்றும், முதல்வர் நான் தான் என பைத்தியம் பிடித்து இருக்கிறார். அவர் நினைத்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் தீர்மானித்து ஓட்டு போட வேண்டும்.  மக்கள் அனைவரும் அதிமுகவின் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட வேண்டும் என  தீர்மானித்து விட்டார்கள். அதிமுகவிற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூட இரட்டை இலை சின்னத்தை காண்பித்து தான் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு வருகிறார். பொங்கல் பரிசு 2500 ரூபாய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

2500 ரூபாயை அனைத்து மக்களும் சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டனர். ஏன் ஸ்டாலின் கூட வாங்கிக் கொண்டார். ஸ்டாலினால் இல்லை என கூற முடியுமா. இராஜபாளையம் பகுதியில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் கொண்டுவந்தோம். அத்தனை திட்டங்களும் இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர் நான் தான் கொண்டு வந்தேன் என போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார். திமுகவினர் ஊர் ஊராகச் சென்று கிராமசபை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்கள் என்ன பஞ்சாயத்து தலைவரா ?இவர்கள் கிராம சபை கூட்டம் நடத்துகிறோம் என கூறி இரண்டு தரப்புக்கும் சண்டை ஏற்படுத்திவிடுகிறார். இளைய தலைமுறை நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன் என கூறுகின்றனர். உதாரணத்திற்கு கமலஹாசன் கூறுகிறார் .யாரவது கலைஞர் கருணாநிதி ஆட்சி தருவேன் என கூறுகிறார்களா? 

விரைவில் இராஜபாளையம் மற்றும் திருச்சுழி பகுதியில்  அரசு கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மகபேறு காலம் ஆகும் பெண்களுக்குத்தான் பத்து நாள் இருக்கிறது. நான்கு நாட்கள் இருக்கிறது 5 நாட்கள் இருக்கிறது என கூறுவார்கள். ஸ்டாலின் ஜோசியக்காரன் போல் 60 நாள் 35 நாள் 30 நாள் எனக் கூறி வருகிறார். அவரால் பேச மட்டும்தான் முடியும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் விரைவில் பறிபோகப் போகிறது என்று அவருக்கு நன்றாக தெரியும். கட்சியினர் யாரும் தங்களை விட்டு போகக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் போட்டு ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் செயல்படுகிறார். ஸ்டாலினுக்கு பொங்கச் சோறு தான் கிடைக்கும். திமுக கட்சிகளுக்கும் பொங்கல்  தான். இவ்வாறு பேசினார்.