மோடிக்கு எதிராக இந்த மெகா கூட்டணியை உருவாக்குவதில் பெரும் முனைப்பு காட்டும் சந்திரபாபு நாயுடுவுக்கு, ராகுல் - ஸ்டாலின் இருவரின் இந்த திடீர் பிணைப்பு அவ்வளவாக பிடிக்கவில்லை! என்பதையும் எழுதியிருந்தோம். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சென்னையில் கருணாநிதி சிலைதிறப்பு விழா பொதுக்கூட்ட மேடையில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் தடாலடியாக முன்மொழிந்து, சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைகளுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தார். 

ராகுலுக்கு பதில் மரியாதை செய்ய விரும்பி, தேவையில்லாமல் கூட்டணியின் பிற கட்சி தலைவர்களின் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டார் ஸ்டாலின்! என்கிறார்கள் நமது வட இந்திய அரசியல் சோர்ஸ்கள். 

என்னவாம்?... என்னதான் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும், ஸ்டாலினை இந்திராகாந்தி முதல் ராகுல் காந்திவரை மூன்று தலைமுறைக்குமே ஆகாது! என்பதையும், ஆனால் மோடியை வீழ்த்தியாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும், காலப்போக்கில் மனிதர்களின் மனதில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்களாக திடீரென சோனியாவும், ராகுலும் ஸ்டாலினை ஆதரிக்க துவங்கிவிட்டார்கள் என்பதையும்! அதன் காரணங்கள், பின்னணிகள் எல்லாவற்றையும் கடந்த சில நாட்களாகவே நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் மிக நுணுக்கமாக பதிவு செய்து வருகிறது.

மோடிக்கு எதிராக இந்த மெகா கூட்டணியை உருவாக்குவதில் பெரும் முனைப்பு காட்டும் சந்திரபாபு நாயுடுவுக்கு, ராகுல் - ஸ்டாலின் இருவரின் இந்த திடீர் பிணைப்பு அவ்வளவாக பிடிக்கவில்லை! என்பதையும் எழுதியிருந்தோம். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சென்னையில் கருணாநிதி சிலைதிறப்பு விழா பொதுக்கூட்ட மேடையில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் தடாலடியாக முன்மொழிந்து, சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைகளுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தார்.

ராகுலுக்கும் இது செம்ம குஷிதான். இந்த புதிய நட்பின் சந்தோஷ நீட்சியாக ராகுல் மற்றும் சோனியாவை விமான நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு இரவில் வீடு திரும்பிய ஸ்டாலின், மறுநாள் அதிகாலையில் எழுந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு பறந்து சென்று, ராகுலுடன் ஒட்டிக் கொண்டார். பேருந்து பயணம், செல்ஃபி என்று தேசத்தையே தெறிக்கவிட்டது இந்த திட்டி ஃப்ரெண்ட்ஷிப்.

இந்த சந்தோஷங்கள் ஒருபுறமிருக்க, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குள் ஸ்டாலினை மையப்படுத்தி பெரும் புகைச்சல் எழுந்துள்ளது. அதாவது ‘யாரை கேட்டு ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தார்?’ என்று மம்தா, நாயுடு, அகிலேஷ் யாதவ், யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களின் ஆதரவாளர்கள் பெரும் கொந்தளிப்பை காட்ட துவங்கினார்களாம். துவக்கத்தில் மம்தா அலட்டிக் கொள்ளவில்லை, ஆனால் ரெண்டாவது நாளில் அவரே வெளிப்படையாக கூட்டணியின் பிற தலைவர்களிடம்....’யஹ் அச்சா நஹி ஹை’ (இது சரியானதில்லை) என்று கோபப்பட்டுவிட்டாராம்.

அதிருப்தி தலைவர்களின் ஆதங்கம் என்னவென்றால், ’ஒரு பொது பிரச்னைக்காக நாம் கூடி நிற்கிறோம். நமது எதிரி சர்வாதிகார தொனியிலான மோடி எனும் பிரதமர். அந்த பதவியிலுள்ள நபரை வீழ்த்திட நாம் இணைந்துள்ள நிலையில் அதே பதவிக்கு நம்மில் ஒருவரை எந்த ஆலோசனையும், முன் அனுமதியும் இல்லாமல் மிஸ்டர். ஸ்டாலின் எப்படி இப்படி அறிவித்தார்?” என்று கேட்டாராம். 

வேறு சில தலைவர்களோ...”தமிழக அரசியல்வாதிகளே இப்படித்தான் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொடிவிடுவார்கள். ஆத்திரமோ, அழுகையோ, மகிழ்ச்சியோ! எதையுமே மறைத்து வைக்க அவர்களுக்கு தெரியாது. ஆனால் தேசிய அரசியலில் இந்த போக்கு சரி கிடையாது. நேஷனல் பாலிடிக்ஸுக்கு புதியவரான ஸ்டாலின் இனியாவது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பொது நன்மை கருதியும், பொது கருத்தை கவனத்தில் கொண்டும் பேச வேண்டும். இது இன்னும் தொடர்ந்தால் நாங்கள் வேறு வகையில் சிந்திக்க வேண்டியிருக்கும்.” என்று குமுறியுள்ளனர்.

இந்த விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே ராகுல் மற்றும் ஸ்டாலினின் கவனத்துக்கு பாஸ் ஆகிவிட்டது. ஆனால் ஸ்டாலின் தரப்போ ‘எப்படி பார்த்தாலும் கூட்டணியின் தலைமை கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். நாளை எல்லோரும் ஒப்புக்கொண்டு சொல்வதை, தளபதி இன்றே சொல்லிவிட்டார். இதிலென்ன தப்பிருக்கிறது?” என்கிறார்கள். ராகுலோ ’நண்பேன் டா!’ என்று குஷியோ குஷியில் இருக்கிறார்.