"மூத்த அண்ணனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்"... ஸ்டாலின் உருக்கம்..! 

ஆகஸ்ட் 10 ஆம் தேதி, கலைஞரின் முதல் பிள்ளையான ‘முரசொலி’ இதழ் பிறந்த நாள் என ஸ்டாலின்  புகழாரம் சூட்டி உள்ளார். முரசொலி நாளிதழ் தனது மூத்த அண்ணன் என கூறி, அதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என திமுக  செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்து உள்ளார் 

இதனை தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 11 இன்று வெளியான முரசொலி பத்திரிக்கையில் ஒரு அறிக்கை  விடுத்துள்ளார் ஸ்டாலின். அதில் "ஆகஸ்ட் 10, தலைவர் கருணாநிதியின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள்களில் ஒன்று. அவரது முதல் பிள்ளையான ‘முரசொலி’ இதழ் பிறந்த நாள். திமுகவுக்கு வாளும், கேடயமுமாய் ‘முரசொலி’யை வார்ப்பித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் தலைவர் கருணாநிதி. தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’ என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். காகிதக் கண்ணீர் வடித்து நிற்கிறது ‘முரசொலி’ என  குறிப்பிட்டு உள்ளார் 

என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே..!

"என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்ற ஒற்றை சொல்லால் அன்பால் நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். தலைவர் தொண்டர் என்ற வேறுபாடு இல்லாமல் பார்த்து வந்தவர் தலைவர் கருணாநிதி உங்களில் ஒருவனாக எல்லாவற்றையும் இழந்த மனநிலையில் உள்ளேன். “ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்று மும்முறை அவர் சொன்னதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் பாராட்டுப் பட்டயம்  என ஸ்டாலின் அவரது குறிப்பில் தெரிவித்து உள்ளார். 

கருணாநிதிக்கு மூத்த பிள்ளை இவர் தான்....எனக்கு மூத்த அண்ணனும் இவர் தான்...ஸ்டாலின் உருக்கம்..!

திமுக கட்சி தொண்டர்கள் அனைவரும், தலைவர் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட ‘முரசொலி’ தான்  அவருக்கு மூத்த பிள்ளை, எனக்கு முரசொலி தான் மூத்த அண்ணன் என ஸ்டாலின் புகழாரம் தெரிவித்து  உள்ளார்..

எனவே, கருணாநிதியின் மூத்த மகனும், என்னுடைய மூத்த அண்ணனுமான முரசொலியை வாழ்த்துகிறேன்   வணங்குகிறேன் என தெரிவித்து உள்ளார் ஸ்டாலின்