திமுக பொதுச்செயலாளர் பதவி கிடைக்குமா? கிடைக்காத என்கிற விரக்தியில் துரைமுருகன் இருப்பதாகவும் திமுகவில் இன்னொரு குரூப் துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு குரல் கொடுத்து வருவதாகவும் வெளிவரும் தகவல் அண்ணாஅறிவாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவின் முக்கிய பதவி பொதுச்செயலாளர். பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு பிறகு திமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருக்கிறது. இந்த பதவிக்கு ஐ. பெரியசாமி ஏவ.வேலு, ஜெகத்ரட்சகன், ஆர்எஸ்.பாரதி என மூத்த தலைகள் எல்லாம் முட்டி மோதி பார்த்தார்கள்.இந்த நிலையில் திமுகவின் பொருளாளர் பதவியில் இருக்கும் துரைமுருகனை அந்த பதவியை விட்டு ராஜினாமா செய்யச் சொன்னார் ஸ்டாலின். அவரும் ராஜினாமா செய்து விட்டு "இளவுகாத்த கிளி"யாக பொதுச்செயலாளர் பதவி வரும்... வரும் என்று காத்திருக்கிறார். கொரோனா வந்து அவருக்கான பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவிடவில்லை. மக்கள் பணி செய்ய வேண்டி இருப்பதால் மீண்டும் பொருளாளர் பதவியை கவனிப்பார் துரைமுருகன் என்று அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். அப்செட்டான துரைமுருகன் அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்து வந்தார். இந்த நிலையில் திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா தொற்றால் இறந்தார். இந்த இறப்பு "ஒன்றினைவோம் வா" நிகழ்ச்சி நடத்தியதால் தான் இப்படியொரு துயரச்சம்பவம் நடந்தது என்று அதிமுக ,குற்றம் சாட்டி அன்பழகன் குடும்பத்தை கொம்பு சீவிவிட்டது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வயது முதுமையின் காரணமாக ஏலகிரியில் உள்ள சொகுசு பங்களாவில் குடும்பத்துடன் குடிஇருந்து வருகிறார் துரைமுருகன். ஜீலை 1ம் தேதி இவருக்கு பிறந்த நாள். தலைவர் ஸ்டாலினிடம் இருந்து போன் வந்ததும் பிறந்தநாள் பரிசாக பொதுச்செயலாளர் என்று அழைப்பார் என்று எதிர்பார்த்த  துரைமுருகனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்தது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் துரைமுருகன். இதற்கிடையில் திமுகவில் ஒரு குரூப். பொதுச்செயலாளர் பதவி..., இதுவரைக்கும் முதலியார் சமூகத்தை சேர்ந்த பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோருக்கு  தான் தலைவர் கலைஞர் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். அது தொடர வேண்டும். எனவே ஆர்.எஸ் பாரதி போன்றவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுக்க வேண்டும் என்று ஒரு புயலை கிளப்பி வருகிறார்கள். இந்த புயல் ஸ்டாலினை மேலும் குழப்பமடையச் செய்திருக்கிறது.

திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலம் தாழ்த்தப்படுவது துரைமுருகனுக்கு கிழியை ஏற்படுத்தினாலும்  நான் தான் சீனியர் எனக்கு தான் பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார் துரைமுருகன். இதுகுறித்து தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் நான்தான்ய்யா பொதுச்செயலாளர்.. எப்படியும் 'அந்த பதவியை அடைந்தே தீருவேன்'. என்று சபதமெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.