Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செருப்பு கழற்ற சொன்ன விவகாரம்... என்ன நடவடிக்கை எடுத்தீங்க... விளக்கம் கேட்டு எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ்

அங்குள்ள கோயில் ஒன்றுக்கு திண்டுக்கல் சீனிவாசன் செல்லும்போது அங்கே இருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றுமாறு கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

st commission sent notice on dindugal srinivasan issue
Author
Chennai, First Published Feb 13, 2020, 10:59 PM IST

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனிடம் தனது செருப்பைக் கழற்ற சொன்ன விவகாரத்தில், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.st commission sent notice on dindugal srinivasan issue
கடந்த வாரம் நீலகிரி முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையிட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அங்குள்ள கோயில் ஒன்றுக்கு திண்டுக்கல் சீனிவாசன் செல்லும்போது அங்கே இருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றுமாறு கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

st commission sent notice on dindugal srinivasan issue
 இந்த விவகாரத்தில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

 st commission sent notice on dindugal srinivasan issue
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதால், நீலரிகிரிக்கு சென்று பழங்குடியின சிறுவனையும், சிறுவனின் பெற்றோரையும் அழைத்து மன்னிப்பு கோரினார். இந்நிலையில், இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னெ என்று தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளருக்கு பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸில், இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios