Asianet News TamilAsianet News Tamil

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் கூறியுள்ளார். 

SSLC exam Postponed... edappadi palanisamy announcement
Author
Tamil Nadu, First Published Mar 21, 2020, 2:44 PM IST

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பரவி 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 271 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

SSLC exam Postponed... edappadi palanisamy announcement

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

SSLC exam Postponed... edappadi palanisamy announcement

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தனர். 
அதில், உத்தரப் பிரதேசத்தை போல் தமிழகத்திலும் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி கொடுக்க வேண்டும். சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது போல தமிழகத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையும் ஆலோசனை நடத்தி வந்தது. 

SSLC exam Postponed... edappadi palanisamy announcement

இந்நிலையில், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios