திமுக தலைவர்  கருணாநிதி விரைவாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை இலங்கை அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

உடல் நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து அறிய மருத்துவமனை  நுழைவுவாயில் முன்பு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மருத்துவமனை வந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விவசாரித்து செல்கிறார்கள். இந்நிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் தலைமையில், இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், ராமேஸ்வரன் ஆகியோர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். 

அப்போது அவர்கள் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா வழங்கிய கடிதம் ஒன்றை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அந்த கடிதத்தில் திமுக தலைவர்  கருணாநிதி விரைவாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மைத்ரிபால சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.