Asianet News TamilAsianet News Tamil

பொம்பள புள்ளைக்கு முருகேசன்னு பேரு வெச்ச ஸ்ரீபிரியா... எல்.கே.ஜி. ஸ்டூடண்ட்ஸ் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார அலப்பறைகள்..!

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அதுவும் மரமாய் முளைத்து அதிலும் பூ விட துவங்கிவிட்ட நிலையில்தான் பெரிய கட்சிகளின் ப்ரொஃபைல் உள்ளது. அவர்களே தேர்தலில் திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மவரின் ‘ம.நீ.ம.’ பிரசார களத்தில் கொடுக்கும் அலப்பறைகள் தாங்க முடியலிங்க பாஸ். 

sri priya makkal neethi maiyam
Author
Tamil Nadu, First Published Apr 9, 2019, 5:57 PM IST

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அதுவும் மரமாய் முளைத்து அதிலும் பூ விட துவங்கிவிட்ட நிலையில்தான் பெரிய கட்சிகளின் ப்ரொஃபைல் உள்ளது. அவர்களே தேர்தலில் திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மவரின் ‘ம.நீ.ம.’ பிரசார களத்தில் கொடுக்கும் அலப்பறைகள் தாங்க முடியலிங்க பாஸ். 

மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்துகு ஒரு பாயிண்டுக்கும் போவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முன்பாகவே அக்கட்சியின் ரெண்டு மூன்று கார்கள் போய் நின்று, மைக்கில் ‘இதோ வந்துவிட்டார் நம்மவர், அதோ வந்துவிட்டார் விஸ்வரூப நாயகன், இன்னும் ஓரிரு நொடிகளில் வருகிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவன்’ என்று எக்கச்சக்க பில்ட் அப் கொடுக்கின்றனர். இதை நம்பி வந்து நெடுநேரமாக நின்று நொந்து போகும் மக்கள் ஒரு கட்டத்தில் டென்ஷனாகி நகர்ந்துவிட, அதன்பிறகு மெதுவாக வந்து நிற்கிறார் கமல். அவர் வரும் நேரம் கூட்டம் குறைவாக இருப்பதால், மாநில நிர்வாகிகள் அந்தந்த பாயிண்டின் பொறுப்பாளர்களை திட்டித் தீர்க்கின்றனர். sri priya makkal neethi maiyam

இப்படியான கூத்துக்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, அந்த கட்சியின் இரண்டாம் நிலை நிர்வாகிகளான ஸ்ரீபிரியா போன்றோரின் ரவுசு வேற ரீதியில் இருக்கிறது. சமீபத்தில் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசரை ஆதரித்து ஓட்டேரியில் பிரசாரம் செய்தார் ஸ்ரீபிரியா. 
பூட்டிக் கிடந்த வீட்டினை தட்டு தட்டென அவர் தட்ட, பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து ‘யம்மோவ் அங்க ஆளில்ல. இன்னா விஷயம்?’ என்று கேட்குமளவுக்குதான் அவரது பிரசார மாஸ் இருந்தது. sri priya makkal neethi maiyam

இதை விட ஒரு பெரிய கூத்து அதற்கு அடுத்த தெருவில். ஸ்ரீபிரியாவிடம்  ஒரு குழந்தைய நீட்டி, ‘பேரு வைம்மே!’ என்றதும், கமல்! என்றாராம் ஸ்ரீபிரியா. உடனே ‘அய்யே இது பொம்பளப்புள்ள.’ என்றதும், ‘தாமரை’ என்றாராம். அப்போது பக்கத்திலிருந்த நிர்வாகிகள், ‘யக்கோவ் இது மோடி கட்சி சின்னமாச்சே. தலீவருக்கு தெர்ஞ்சா தர்ஸாயிடுவாரு.’ என்று எச்சரிக்க, உடனே ஸ்ரீபிரியாவோ ‘தாமரைக்கு இந்தியில கமல்-ன்னு பேரு. நம்ம தலைவர் பேரைத்தான் வெச்சிருக்கேன். டோண்ட் ஒர்ரி.’ என்றாராம். sri priya makkal neethi maiyam

இதுல பெரிய கூத்து என்னான்னா, அந்தக் குழந்தைக்கு எப்பவோ ‘சினேகா’ன்னு அந்த குடும்பம் பேர் வெச்சிடுச்சு. இப்போ அந்த வூட்டாளுங்களுக்கு கொயப்பம் இன்னான்னா, நம்ம புள்ள பேரு சினேகாவா, தாமரையா இல்ல கமலா?ங்கிறதுதான். ‘சிநேகா, தாமரை கூட பொம்பள புள்ள பேரு. ஆனா கமல்-ங்கிறது ஆம்பள பேரு. கவுண்டமணி பொம்பளப்புள்ளைக்கு முருகேசன்னு பேரு வெச்ச கணக்காகீதேப்பா.’ என்று நொந்திருக்கிறார் அந்த கொயந்தயின் தாத்தா. என்னா கொயப்பம்டா!

Follow Us:
Download App:
  • android
  • ios