டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தமீமுன் அன்சாரி ஆகியோரின் எம்.எல்.ஏ பதவிகளை பறிக்க நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதிமுக கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள 4 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் தனபாலுடன்  சட்டத்துறை அமைச்சர் சி..வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

 

அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி- பிரபு, விருத்தாசாலம் கலைச்செல்வன் ஆகியோருக்கும், இரட்டை இலையில் வென்ற தமிமுன் அன்சாரிக்கும் அதிமுக நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்து வருவதாக பதவியை பறிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு  நோட்டீஸ் அனுப்ப கொறடா கடந்த ஆண்டு பரிந்துரை அளித்ததாக தகவல் வெளியானது. அந்தப் பரிந்துரையை ஏற்று சபாநாயகர் பதவியை பறிக்க நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.