சட்டசபையில் பங்கேற்பது தொடர்பாக இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணியினரின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு காணப்படும் என்று களக்காட்டில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டசபையில் பங்கேற்பது தொடர்பாக இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணியினரின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு காணப்படும் என்று களக்காட்டில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

வேளாண்மை துறை சார்பில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நெல்லை மாவட்டம் களக்காட்டில் நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி முதல்வர் இங்கு வாழைத்தார் ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் கட்டிட பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும்'' என்றார். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ்ஆ..? ஆர்.பி.உதயகுமாரா..? காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி..! சபாநாயகர் முடிவு என்ன..?

மேலும் அவரிடம் இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணியினர் கொடுத்துள்ள கடிதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ''நான் இங்கு இருக்கிறேன். கடிதங்களை இன்னும் படிக்கவில்லை. ஆளுக்கு 2 கடிதங்கள் கொடுத்துள்ளனர். அவைகள் எனது பரிசீலனையில் உள்ளது. நான் சென்னை சென்றதும், கடிதங்களை படித்துப் பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க;- நெருக்கடியில் எடப்பாடியாரின் வலது கரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!