Asianet News TamilAsianet News Tamil

சிம்புவை பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி… என்ன பேசினார் தெரியுமா?

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் சிம்பு பற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார். 

sp velumani speaks about actor simbhu at covai admk protest
Author
First Published Sep 17, 2022, 12:18 AM IST

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் சிம்பு பற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார். மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு தாலுகா தாசில்தார் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் பேசிய எஸ்.பி வேலுமணி, அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது. இந்த ஆட்சியில் குடிநீர் வரியும் அதிகப்படுத்தி உள்ளனர். தற்போது கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொத்து கொத்தாக உயிர் பலியாகியது. மின் கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 53% ஆக அதிகப்படுத்தி உள்ளது இந்த திமுக அரசு. திமுக அரசின் கவலை பணத்தை எப்படி கொள்ளை அடிப்பது என்பது தான். அம்மா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை  நாங்கள் காப்பாற்றியதால் ஸ்டாலினுக்கு கோபம். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்தார் அது நடக்கவில்லை. அப்போதே ஸ்டாலின் கோவைக்கு வந்த போது என்னை விட மாட்டேன் என தெரிவித்து சென்றார்.

இதையும் படிங்க: “ஆ.ராசாவை ஸ்டாலின் நீக்குவாரா.. மோடி & அமித்ஷா தமிழ்நாட்டில் போட்டி.! ‘சீக்ரெட்’ சொன்ன அர்ஜுன் சம்பத் !”

திமுக குடும்பம் என்றைக்குமே எங்களுக்கு எதிரி தான். அதில் எந்தவித சமரசமும் இல்லை. என்மீதுள்ள கோவத்தில் தான் எனது வீட்டிற்கு ரெய்டு மூன்றாவது முறையாக வருகிறது. அவர்களும் எனது வீட்டில் வந்து போட்டு சோபா, சேர் செட்டுகளை எண்ணி தான் செல்கின்றனர். நாங்கள் எங்களது ஆட்சியில் எந்த வசூலும் செய்யவில்லை கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. மிரட்டல்களுக்கு கவலைப்படுவதில்லை. ரெய்டின் போது காவல் துறையினர் எம்எல்ஏக்களை இழுத்து தள்ளி விடுகின்றனர். சகோதரிகளை சேலையை பிடித்து தள்ளி விடுகின்றனர். காவல்துறைக்கு எனது கடுமையான கண்டனத்தை நான் தெரிவித்துகொள்கிறேன். இந்த ஆட்சி இதிபோலவே இருக்காது. நிச்சயமாக மண்ணை கவ்வும். அப்போது காவல் துறையின் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன். நீங்கள் காக்கி சட்டை போடவே முடியாது. திருட்டு கொள்ளை கஞ்சாவை தடுக்க போலீசுக்கு நேரம் இல்லை. காவல்துறை எங்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலின் என்ன கடவுளா? இதுவரை இருந்த தலைவர்களில் யாருமே இவரைப்போல் மோசமான தலைவராக இல்லை. எங்கு பார்த்தாலும் திமுக ஆட்சியில் லஞ்சம்.

இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் படிப்பு விவகாரம்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இந்த ஆட்சி மக்களை சுரண்டும் ஆட்சி. 50,000 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியுள்ளது திமுக அரசு. மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம். நீங்கள் பணத்தை வாங்கி தப்பித்து விடுவீர்களா. நாங்கள் விட்டுவிடுவோமா. கோவை மாநகர டி .சி சிலம்பரசன் சினிமாவில் நடிக்கும் சிலம்பரசனா? சிம்புவா? கட்சி பெண்கள் மீதும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீதும் கை வைக்கிறார். அப்படி கை வைக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. நாங்கள் இதை மறக்க மாட்டோம். சாலை போட வக்கில்லை. கலெக்டர் பொம்மை போல் உள்ளார். திமுக கோவைக்கு ஒன்னும் செய்யவில்லை. பாலம் பணி கிடப்பில் உள்ளது. எடப்பாடி ஆட்சியில் இருக்கும்போது பொங்கல் பரிசு எப்படி இருந்தது? ஆனால் இப்போது மோசமான பொங்கல் பரிசு கொடுத்து வரிகளை உயர்த்தி உள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40ம் வெல்வோம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 சீட்டுக்கு மேல் வெல்வோம் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios