Asianet News TamilAsianet News Tamil

பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும்..! இல்லையென்றால்...? திமுக அரசை எச்சரிக்கும் எஸ்.பி.வேலுமணி

ஓசிபஸ்ல போறீங்க என்று நக்கலாகவும், நையாண்டியாகவும், முகபாவனையால் மற்றும் உடல் மொழியால் பெண்களை கேவலப்படுத்தி, இழிவுபடுத்தும் விதமாக அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சிற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளதாக சட்டமன்ற எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
 

SP Velumani has insisted that the false case filed against the AIADMK should be withdrawn
Author
First Published Oct 2, 2022, 12:55 PM IST

பெண்களை கேவலப்படுத்தும் அமைச்சர்

அதிமுகவினர் மீது  பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை வாபஸ் பெறவில்லையென்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சட்டமன்ற எதிர்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக வாக்காளர்களிடம் பொய் வாக்குறுதியளித்து ஆட்சியை பிடித்த திமுக அரசின் அங்கம் வகிக்கும் மாண்புமிகு அமைச்சர் க.பொன்முடி அவர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் தமிழக பெண்களை கேவலப்படுத்தும் விதமாக மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு வழங்கிய சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தில் பயன்பெறும் பயணாளிகளை பார்த்து

அரசு விழாவில் சீனியர் அமைச்சராக பதவி வகிக்கும் மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் ஏழை எளிய பெண்களின் சுயமரியதையை கேலி செய்து, பஸ்ல எப்படி போறீங்க, இங்கு இருந்து கோயம்பேடு போகனும்மனாலும், எங்கபோகனும்மனாலும் ஓசி, ஓசிபஸ்ல போறீங்க என்று நக்கலாகவும், நையாண்டியாகவும், முகபாவனையால் மற்றும் உடல் மொழியால் பெண்களை கேவலப்படுத்தி,இழிவுபடுத்தும் விதமாக அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சிற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காற்றில் பறந்த ஸ்டாலின் வாக்குறுதிகள்...! மேடைக்கு மேடை முழங்கிய மூன்று C க்கள் மட்டும் அமோகமாக உள்ளது- ஓபிஎஸ்

SP Velumani has insisted that the false case filed against the AIADMK should be withdrawn

 வயதான பெண்மனி மீது வழக்கு

அமைச்சர் க.பொன்முடி அவர்கள் ஓசி பஸ்ல போறீங்கள்ள ? என பெண்களை இழிவுபடுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இவரது சொந்த பணத்திலா திட்டத்தை அமல்படுத்தி உள்ளார். தமிழக பெண்களை பார்த்து ஒசி பஸ்ல போறீங்க என கேட்பதற்கு அவருடைய சொந்த பேருந்துதிலா ஒசியில் அழைத்து செல்கிறார் ? இந்நிலையில் கோவை மாவட்டம், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரை மார்கெட் வழியாக கண்ணமநாயக்கனூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய மதுக்கரை மார்கெட் பகுதியில் பேருந்தில் ஏறி பாலத்துறை செல்லும் ஒரு வயதான பெண்மணி நடத்துனரிடம் டிக்கெட் கேட்டு கட்டணம் கொடுத்துள்ளார். நடத்துனர் பணம் வேண்டாம் என மறுத்துள்ளார். அதற்கு அந்த வயதான பெண்மணி எனக்கு ஒசிப் பயணம் வேண்டாம் என கூறி பயணித்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிகழ்விற்கு அஇஅதிமுகவின் கழக தொண்டர்கள் தான் காரணம் என்று ஆர்.பிருத்திவிராஜ் த/பெ. ரங்கசாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SP Velumani has insisted that the false case filed against the AIADMK should be withdrawn

தவறான TSR நகலா..?

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண். 427/2022-30.09.2022 படி ஆர்.பிருத்திவீராஜ் த/பெ.ரங்கசாமி, மதிவாணன் த/பெ.வெள்ளிங்கிரி, விஜய்ஆனந்த் மற்றும் துளசியம்மாள் க/பெ.ரங்கசாமி, ஆகியோர் மீது u/s கீழ். 294(b), 504, 505 ()(b), 505 (ii)IPC ஐந்து பிரிவுகளில், திமுகவை சார்ந்த மதுக்கரை நகர செயலாளர் ராமு, த/பெ.நஞ்சப்பன் 3/343-ஆர், பத்திரகாளியம்மன் கோவில் வீதி, காந்திநகர், மதுக்கரை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவிவருகிறது. இச்செய்தி குறித்து கழக வழக்கறிஞர்கள் காவல் நிலைத்தில் கேட்டறிந்ததில் தவறான செய்தி என தெரிவித்தனர். மேலும் காவல்துறை அதிகாரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பிருத்திவீராஜ் அவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குற்ற எண். 427/2022 TSR தவறானது என காவல்துறையினரே தெரிவிக்கும் போது இது போன்ற தவறான TSR நகல் எவ்வாறு பரவுகிறது. யார் இந்த தவறை செய்கின்றனர் என்பதைனை விசாரித்து அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை

SP Velumani has insisted that the false case filed against the AIADMK should be withdrawn

திமுக அரசுக்கு எச்சரிக்கை

கடந்த 1 1/2 ஆண்டுகலாக காவல்துறை அரசின் கைபாவையாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறது. தற்போது காவல்துறையினர் கழக தொண்டர் பிருத்திவீராஜ் மீது பதிவு செய்த பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையேனில் மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் கழக இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அனுமதியை பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மேற்கு மண்டல IG அலுவலகம் முன்பு அ.இ.அ.தி.மு.கழகத்தின் சார்பில் ஜனநாயக ரீதியாக முற்றுகை போராட்டம் நடைபெறும்.

ஒசி பஸ் பயணம் என ஏளனம் செய்த அமைச்சரின் பேச்சை கண்டிப்பதை விடுத்து, தனது அமைச்சரவை அமைச்சர்களை கட்டுப்படுத்த இயலாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை வைத்து, தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் கழக தொண்டர்கள்  மீது வழக்கு பதிவு செய்ததை வாபஸ் வாங்க வலியுறுத்துவதோடு, கண்ணியமிக்க காவல்துறையை, சட்டம், ஒழுங்கு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும். என சட்டமன்ற எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

பொது இடங்களில் புகை பிடிக்கத்தடை..? மத்திய, மாநில அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்- அன்புமணி


 

Follow Us:
Download App:
  • android
  • ios