திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் 2வது முறையாக 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. வருமானத்தை விடக் கூடுதலாக 58.23 கோடிக்கு வேலுமணி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது. 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2வது முறையாக சோதனை நடத்திய நிலையில், அவர் விரைவில் சிறை செல்வார் என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் 2வது முறையாக 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. வருமானத்தை விடக் கூடுதலாக 58.23 கோடிக்கு வேலுமணி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது. அவரோடு சேர்த்து மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று கேரளா, தமிழகம் என 58 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை

சோதனை நடத்தப்படும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி கருப்பணன் ஆகியோர் வருகை தந்தனர். அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்களில் திமுகவினரின் ஆள்தூக்கி நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும், வீரத்துடன் எதிர்த்துப் போராடிய வேலுமணியை முடக்கிப் போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றது என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் நன்கு அறிவார்கள். இது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது. 

வேலுமணி சிறை செல்வார்

இந்நிலையில், வேலுமணி விரைவில் சிறை செல்வார் என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில்;- “சென்னை மற்றும் கோவை மாநகராட்சி ஊழல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய காரணத்திற்காக அறப்போர் இயக்கம் மீது பல பொய் வழக்குகள் தொடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர் செய்த ஊழல்களுக்காக சிறைக்கு செல்லும் நாள் நெருங்கிக் கொண்டே வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…