இந்தியா தென்கொரிய தூதரை அழைத்து அவளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதேபோல் சியோலில் உள்ள இந்திய தூதரும் இந்தியாவின் அதிருப்தியை தென்கொரிய அரசுக்கு தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் மட்டும் கியா கார் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் தென்கொரிய வெளியுறவு துறை அமைச்சர் ' சுங் யூய் யோங்' இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்து கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் தென்கொரிய தூதரை அழைத்து இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில், தங்கள் நாட்டு நிறுவனங்களின் செயலுக்கு தென்கொரிய வெளியுறவு துறை அமைச்சரே தனது
வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒவ்வொராண்டும் காஷ்மீரை உரிமை கொண்டாடும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைபிடித்து வருகிறது. இந்நாளை தேசிய விடுமுறை தினமாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதாவது காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என்பதே வலியுறுத்தும் நாளாகவே அத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில்தான் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளன. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய், கியா மோட்டார் மற்றும் கேஎஃப்சி போன்ற நிறுவனங்கள், " நமது காஷ்மீர் சகோதரர்களின் தியாகங்களை நினைவு கூறுவோம், அவர்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம் என கருத்து தெரிவித்துள்ளன.

அந்நிறுவனங்களின் இந்த பதிவு இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஹூண்டாய், கேஎஃப்சி, கியா நிறுவனங்கள் மன்னிப்பு கோரவேண்டும் என்றும், இந்நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், ஹூண்டாய் நிறுவனத்தைப் இந்தியர்கள் புறக்கணிப்போம் என்றும் ட்விட் எதிர்ப்பு ட்ரெண்டானது. குறிப்பிட்ட நிறுவனங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் இந்நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்போம் என சமூக வலைதளத்தில் இந்தியர்கள் ஆர்தெதெழுந்தனர். இந்நிறுவனங்களுக்கு எதிரான ஹாஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தனது பாகிஸ்தான் கிளை நிறுவனம் பதிவிட்ட கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக ஹூண்டாய் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் வலுவான நெறிமுறைகளுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். இந்திய நாடு ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது தாயகமாகும். இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவுக்கு தொடர்பில்லாத விவகாரத்தில் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வந்துள்ளன. அதை நாங்கள் கண்டிக்கிறோம். என்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக எங்கள் பணி தொடரும் என அதில் தெரிவித்திருந்தது. இதேபோல கியா மோட்டார்ஸ் மற்றும் கேஎப்சி நிறுவனங்களும் இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது. அதில் இந்தியாவில் நாங்கள் மதிக்கிறோம், இந்தியாவுக்காக சேவையாற்றுவதற்கு பெருமையடைகிறோம், கேப்ஸி பாகிஸ்தான் சமூகவலைதள பதிவில் இட்டுள்ள பதிவிற்கு நாங்கள் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம் எனக் கூறியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு இந்தியாதனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா தென்கொரிய தூதரை அழைத்து அவளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதேபோல் சியோலில் உள்ள இந்திய தூதரும் இந்தியாவின் அதிருப்தியை தென்கொரிய அரசுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் பதறிப்போன ஹுண்டாய் நிறுவனம் தங்களது நிறுவனத்தின் பெயரில் வெளிவந்த ட்விட்டர் பதிவுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது, பாகிஸ்தானில் உள்ள விநியோகஸ்தர்கள் தனது சொந்த கணக்குகளில் இருந்து இந்த பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த தகவல் தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் அடையாளத்தை தவறாக பயன்படுத்திய விநியோகஸ்தர்களின் சமூக வலைதள இடுகை பதிவுகள் அகற்றப் பட்டுவிட்டதாகவும் அடுத்தடுத்த விளக்கம் அளித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரிய வெளியுறவு அமைச்சர் ' சங் யூய் யோங் ' இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.இந்த தகவலை ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இன்று தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இருதரப்பு மற்றும் பல தரப்பு பிரச்சனைகள் மற்றும் ஹுண்டாய் விவகாரம் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது என அவர் பதிவிட்டுள்ளார்.
சந்தையில் முன்னணியில் உள்ள மாருதி சுசுகிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக ஹூண்டாய் நிறுவனம் உள்ளது மற்றும் இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் அது உள்ளது. ஜனவரி 2022 இல், இது 44,022 யூனிட்களை விற்றபனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2021 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் இந்தியாவில் 505,033 யூனிட்களை விற்றுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 19.2 சதவீதம் அதிகமாகும். முழுக்க முழுக்க இந்நிறுவனத்தின் வருமானம் இந்தியாவை சார்ந்தே உள்ளது. இதனால்தான் பதறி அடித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
