தினகரன் கோஷ்டியில் படுதீவிரமாக இயங்கியவர் செந்தில் பாலாஜி. அத்துடன் தினகரன் கோஷ்டிக்கான செலவுகளையும் செந்தில் பாலாஜி பார்த்துக் கொண்டார். ஆனால் இதுவரை தினகரனிடம் இருந்து சல்லிக்காசும் செந்தில் பாலாஜிக்கு வரவில்லை. இதனால் விரக்தியில் இருந்த செந்தில் பாலாஜி ஒரு கட்டத்தில் போனை ஸ்விட்ச் ஆப்  விட்டு திமுக முக்கிய புள்ளிகளோடு டீல் பேச தொடங்கியிருக்கிறார்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த செந்தில்பாலாஜி அசைக்க முடியாத  பலத்துடன் வலம் வந்தார். மறைந்த  ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்ற அவருக்கு ஜெயலலிதா அவருக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார். அதற்கேற்றாற்போல் அவரும் செயல்பட்டு தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற தீயாய் வேலை பார்த்தார்.

தற்போது செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பொள்ளாச்சியில் இருக்கும் தனது ஆஸ்தான ஜோதிடர் சொல்வதை வைத்து அடுத்த நகர்வுகளை தொடங்குவாராம் செந்தில் பாலாஜி. அவரைக் கேட்காமல் அவர் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. அந்த ஜோதிடர்தான் செந்தில்குமார் என்ற பெயரை செந்தில் பாலாஜி என மாற்றினாராம்.  திமுகவுக்குப் போகலாம் என கிரீன் சிக்னல் காட்டியதும் அந்த ஜோதிடர்தான் என்று சொல்கிறார்கள்.

நேற்று இரவிலிருந்து அவர் வீட்டில் தங்கி சில ஆலோசனைகளைக் கேட்டவர், இன்று பிற்பகல் கோவைக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு  வந்திருக்கிறார். சென்னை விமானநிலையத்தில் வெளியில் வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அமமுக, அதிமுகவிற்கு ஷாக்காக அமைந்திருக்கிறது. 

ஆமாம், திமுக கொள்கை பரப்புச் செயலாளரான ஆ.ராசாவுடன் வெளியில் வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. இது எப்போது எடுக்கப்பட்டது என சரியான தகவல் கிடைக்கவில்லை, ஆனாலும் இந்த புகைப்படம் நாளை திமுகவில் இணைய வரும் செந்தில் பாலாஜியை கையோடு ஆ.ராசா அழைத்து வந்துள்ளதாக செய்திகள் உலா வருகிறது. ஆ.ராசாவோடு செந்தில்பாலாஜி இருக்கும் இந்த போட்டோவை பார்த்த அமமுக கூடாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

கட்சியில் சேர கையேடு அழைத்து வரும் ஆ.ராசாவோடு, செந்தில் பாலாஜி கப்சிப் யென கமுக்கமாக பின்னாடியே வரும்  இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.