Asianet News TamilAsianet News Tamil

3-வது அணிக்கு கேட் போட்ட சோனியாகாந்தி... 23-ம் தேதி ஸ்கெட்ச் போட்டு தூக்கப்போகும் காங்கிரஸ்..!

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும், இரு அணியிலும் இல்லாத பிற கட்சிகளுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Sonia Gandhi Back At Alliance Power Play
Author
Delhi, First Published May 16, 2019, 4:48 PM IST

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும், இரு அணியிலும் இல்லாத பிற கட்சிகளுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 

மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று. 7 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்படுகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதில் திமுக, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். Sonia Gandhi Back At Alliance Power Play

பல்வேறு கட்சி தலைவர்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியாகாந்தி அனுப்பியுள்ள கடிதத்தில் டெல்லியில் வருகிற 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார். Sonia Gandhi Back At Alliance Power Play

தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் நிலைப்பாடு குறித்து அந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும், அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பிஜூ ஜனதா தளம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நாளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios