இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்வதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தி ஆட்சி மொழி என்பதை போல், ஆங்கிலமும் ஆட்சி மொழி என்பதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்வதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி சிவா;- இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்வதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தி ஆட்சி மொழி என்பதை போல், ஆங்கிலமும் ஆட்சி மொழி என்பதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இந்தி என்பது இந்த நாட்டில் இருக்கின்ற பல்வேறு மொழிகளில் ஒன்று.

ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தி மட்டுமே என்ற நிலையை மத்திய அரசோ, வேறு அமைப்போ மேற்கொள்ளுமானால் அதனை எல்லா வகையிலும் போராடி தடுத்து நிறுத்தி ஆங்கிலம் தொடர எல்லா முயற்சிகளையும் திமுக எடுக்கும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள், உங்கள் மகன் சூர்யா, பாஜகவில் இணைந்துள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.