சிலருக்கு திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிடிக்காது... அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்!!

திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிலருக்கு பிடிக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார். 

some people dont like the programs implemented in the dravida model govt says minister senthilbalaji

திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிலருக்கு பிடிக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஈராண்டு சாதனை மலர் வெளியிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி,  11 கோடி ரூபாய் மதிப்பலான அரசு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபுவின் மருமகனை அலேக்காக தூக்கிய போலீஸ்.. அதிர வைக்கும் பின்னணி விவகாரம் !!

பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 11 கோடி ரூபாய் அளவிளான நலத்திட்டங்கள் இன்று வழங்கப்பட்டது. திராவிட மாடல் என்றால் பலருக்கு மகிழ்ச்சி, ஒருசிலருக்கு வயிற்று எரிச்சல். அவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிடிக்காது. அரசின் சாதனை திட்டங்களையும், செயல்களையும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம், கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் தந்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் மாற்றம்... நாசர் பதிவியில் இருந்து விடுவிப்பு; டி.ஆர்.பாலுவின் மகனுக்கு வாய்ப்பு!!

பெண்களின் சூழ்நிலை அறிந்து காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். 9 ஆயிரம் கோடி மதிப்பில் கோவை மெட்ரோ இரயில் திட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூர், கர்நாடகா செல்ல இருந்த தொழில் நிறுவனங்களை கோவையில் அமைய முதல்வர் முயற்சி எடுத்துள்ளார். எந்த கட்சிக்கு வாக்கு அளித்தீங்க என்று கேட்டு உங்களுக்கு நலத்திட்டங்களை நாங்கள் வழங்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios