28 ஆண்டுகளாக திரை இசையில் கோலோச்சி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார்.இந்தி திரையுலகில் தனது இசைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு கும்பல் சதி செய்து வருவதாக பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏஆர் ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தி திரையுலகில் தனது இசைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு கும்பல் சதி செய்து வருவதாக பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏஆர் ரகுமான் கூறியிருந்தார். இது மீண்டும் இந்தி திரையுலகத்தினர் மீது வெறுப்பை உருவாக்கியுள்ளது.

 இந்தநிலையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏஆர்.ரகுமான் அளித்த பேட்டியில்.."இந்திப் படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள 'தில் பெச்சாரோ' படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என சிலர் அவரை தடுக்கிறார்கள்.தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாகவும்  நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதற்கு இந்தி திரையுலகில் அவர் புறக்கணிக்கப்பட்டதே காரணம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானும் இதே நிலைக்கு ஆளாகியுள்ளார் என்ற செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது".