நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் எல்.முருகன் யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும், அவரின் பெற்றோர்களிடம் சென்று அவர் ஆசி வாங்க உள்ளதாகவும், கூறினார், அதே நேரத்தில் மக்களுக்கும்- அமைச்சருக்கு இடைவெளி இல்லாமல் அவர் மக்களோடு மக்களாக இருக்கிறார் என்பதை உணர்த்தவே இந்த யாத்திரையை அவர் மேற்கொள்வதாகவும் அண்ணாமலை விளக்கமளித்தார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் தான் கடந்திருக்கிறது, ஆனால் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆறு மாத காலம் அவகாசம் பிடிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதே நேரத்தில் பாஜக திமுகவுக்கு எதிர்க்கட்சி தானே தவிர எதிரி கட்சி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வாக இருந்தாலும் சரி, எதிர்ப்புகளை மீறி மத்திய அரசுகொண்டு வந்த வேளாண் பாதுகாப்பு சட்டமாக இருந்தாலும் சரி, மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு சட்டத்தையும் எதிர்ப்பதில் முதல் ஆளாக நிற்கிறது திமுக. அதேபோல் தமிழகத்தில் அதிமுக திமுகவை எதிர்ப்பதை காட்டிலும், தமிழக பாஜக அதிதீவிரம் காட்டி வருகிறது. 

Click and drag to move

எச்.ராஜா தொடங்கி, காயத்ரி ராகுராம் வரை, திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும், கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.ஆனால் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் திமுக உடனான அவரது அணுகுமுறை மிகவும் பக்குவமானதாகவே இந்த வருகிறது. சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் திருவுருவ படத்திறப்பு விழாவில், திமுகவின் அழைப்பை ஏற்று அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்பித்தார்.அதிமுகவினர் கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில், அதில் அண்ணாமலை கலந்துகொண்டது திமுகவினர் மத்தியிலேயே அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உருவானது, அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகனே ஆண்ணாமலை நல்ல மனிதர் என்று பாராட்டியதே அதற்கு சாட்சி. 

Click and drag to move

இந்நிலையில் இன்று காலை கோவையில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது மத்திய இணை அமைச்சர், எல்.முருகன், வருகிற 16-ஆம் தேதி மக்கள் ஆசி யாத்திரையை கோவையில் இருந்து தொடங்க உள்ளதாக அவர் கூறினார். நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் எல்.முருகன் யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும், அவரின் பெற்றோர்களிடம் சென்று அவர் ஆசி வாங்க உள்ளதாகவும், கூறினார், அதே நேரத்தில் மக்களுக்கும்- அமைச்சருக்கு இடைவெளி இல்லாமல் அவர் மக்களோடு மக்களாக இருக்கிறார் என்பதை உணர்த்தவே இந்த யாத்திரையை அவர் மேற்கொள்வதாகவும் அண்ணாமலை விளக்கமளித்தார். 

Click and drag to move

அப்போது திமுக 100 நாள் ஆட்சியை நிறைவு செய்வது குறித்து அண்ணாமலை அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் அளித்த பதில் தான் இதில் ஹைலைட், அப்போதும் உடனிருந்த சீனியர் லீடர்களே ஒரு கனம்வாயடைத்து போயினர். அந்த அளவிற்கு அந்த பதில் இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துள்ளது, எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்களுக்கு ஆறு மாதம் அவகாசம் தேவை, அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை இப்போதுதான் தொடங்கியுள்ளனர். தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி போன்ற பதவிகளுக்கு நல்ல அதிகாரிகளை கொண்டு வந்துள்ளனர்.

Click and drag to move

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்கூட மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்குவதாக கூறுகிறார். தமிழகத்தில் டிபன்ஸ் காரிடார் வந்ததால் 2000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார், இதுபோலவே மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால், தமிழக மக்கள் பயன்பெறுவர். நாங்கள் திமுகவுக்கு எதிர்க்கட்சி தானே தவிர எதிர்க்கட்சி அல்ல என அவர் கூறினார். இதுதான் அந்த அதிர்சிக்கு காரணம். ஆதாவது, ஒரு சில நேரங்களில் திமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசி வந்தாலும், பல சமயங்களில் திமுக சம்பந்தமான அவரது பதில்கள், நடவடிக்கைகள் பக்குவமாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.