டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கும்பல் நுழைந்து மாணவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியது.  இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழ்நாட்டில் ஏற்கனவே 9 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முன்வந்துள்ள மத்திய அரசு, இப்போது கடலூர், அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முதல்நிலை அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’எனத் தெரிவித்துள்ளார்.